தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் என்று நடிகர் விஜய் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் பிடித்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெற ஆலோசனை நடைபெற இருக்கிறது.