தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே முதல் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 3-வது வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் மாங்காடு, குன்றத்தூர், மதுராந்தகம், பொன்னேரி நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது.