தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணைய அடையாள அட்டையுடன் மத்திய, மாநில அரசின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே வாக்குச்சாவடிக்கு முகவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இல்லையெனில் அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆணைய அட்டையில் புகைப்படம் இருக்காது என்பதால் முகவரை அடையாளம் காண மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.