தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் 122-ல் தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கும் திருநங்கை ஜெயதேவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநங்கை கங்காவுக்கு வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். அதனை போலவே பாஜக சார்பில் திருநங்கை ராஜம்மாவுக்கு சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள 76-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் திருநங்கைகள் பலரும் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது தங்கள் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.