Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு ….!!!!

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னதாகவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் காணொலி காட்சி முலம் ஆய்வு கூட்டங்கள் நடந்து முடிந்தது, இந்நிலையில் தேர்தல் ஆணையர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் திருத்தங்களை மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சென்னையில் 16 தொகுதிகளுக்கான  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அதில் 22,492 வாக்காளர் பெயர் சேர்க்கப்பட்டு மற்றும் 25,515 வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் சென்னையில் வேளச்சேரி தொகுதியில் 3.15 லட்சம் அதிக வாக்காளர்கள் உள்ளன.

அதனைப்போலவே திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, அதில் மொத்த 23,42, 119 வாக்காளர்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் சேகர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 26,81,727 மொத்த வாக்காளரில் ஆண்கள் 13,63,743 மற்றும் பெண்கள் 13,17631 உள்ளனர். கரூரில் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 4,33,011 மற்றும் பெண்கள் 4,66,531 உள்ளனர். மேலும் நெல்லை மாவட்டத்தில் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 6,67,074 மற்றும் பெண்கள் 6,96,271 வாக்காளர்கள் அடங்குவர்.

Categories

Tech |