தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று(பிப்..7) வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.