Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி…. பரபரப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் கட்சி சின்னங்களை பொருத்தும் பணி தேர்தல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள் தெளிவாக தெரியவில்லை என்றும் பிற கட்சிகள், சுயேச்சை சின்னங்கள் தெளிவாக இருந்ததாகவும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்னங்கள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |