Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்….. சென்னை ஆணையர் அதிரடி….!!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 13,000 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த பிரச்சார போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. சுவரொட்டிகள் ஒட்டினால் சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் அதிரடி நடவடிக்கைகளால் இதுவரையிலும் ரூ 1.45 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |