தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருச்சி தில்லைநகரில் அமைச்சர் கே.என்.நேரு, கிராப்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். மேலும் தூத்துக்குடியில் கீதாஜீவன், காட்பாடியில் துரைமுருகன், விழுப்புரத்தில் பொன்முடி, மதுரையில் மூர்த்தி, காரைக்குடியில் எச்.ராஜா, கோவையில் வானதி ஸ்ரீனிவாசன், சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர்.