Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”….. வாக்காளர்களுக்கு செல்போன்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் மாநகராட்சியின் 38-வது வார்டு அம்மன்நகர் பகுதியில் இன்று காலை 7  மணியளவில் அதிமுக சார்பாக வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக தாந்தோணிமலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு செல்போன்களை விநியோகம் செய்து கொண்டிருந்த சங்கர் (21) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் கொடுத்த தகவலின்படி அதே பகுதியில் இருந்த ஈஸ்வரி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அவர் வீட்டிலிருந்த 27 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கு.தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் ஞா.செந்தில்குமார் போன்றோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |