நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் இன்று (பிப்.20) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை அமைப்பு செயலாளர் இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளது என்று கூறியுள்ளார்.