Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தமிழகம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவு…. தேர்தல் ஆணையம்….!!!!

நேற்று (பிப்.19) தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 459 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 57 ஆயிரத்து 746 பேர் போட்டியில் உள்ளனர். தேர்தல் பணியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதில் நகராட்சிகளில் மொத்தம் 68.22 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் மொத்தம் 74.68 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் 52.22 சதவீதம் வாக்குகள் மாநகராட்சிகளில் பதிவாகியுள்ளது. அதிலும் அதிகபட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் சென்னை மாநகராட்சியில் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் மாவட்ட அளவில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Categories

Tech |