நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திரைப்பிரபலங்கள் பலர் வாக்களிக்கவில்லை.
தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் வாக்களித்தார்கள். நடிகர் விஜய் நீலாங்கரையிலும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரின் மனைவியுடன் எஸ்.ஐ.இ.டி கல்லூரியிலும் வாக்களித்தனர். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடியில் வாக்களித்தார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்நிலையில் பிரபல நட்சத்திரங்கள் பலர் வாக்களிக்கவில்லை. நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் எல்லா தேர்தல்களிலும் முதலில் வந்து ஓட்டுப்போட்டு விடுவார். ஆனால் இம்முறை வாக்களிக்கவில்லை. இதுபோலவே நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. மற்ற சினிமா பிரபலங்களான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, திரிஷா, தனுஷ், வடிவேலு உள்ளிட்டோரும் வாக்களிக்கவில்லை. மேலும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வந்து வாக்களித்தனர்.