தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதிமுக 25.47 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாஜக (4.92%), காங்கிரஸ் (3.35%), பாமக (1.54%), அமமுக (1.40%), நாம் தமிழர் கட்சி (1.35%), சிபிஎம் (1.15%), தேமுதிக (0.72%), மநீம (0.70%) மதிமுக (0.65%), விசிக (0.65%), சிபிஐ (0.56%) ஆகிய வாக்குகள் பெற்றுள்ளன. அதன்பின் சுயேட்சைகள் 13.01% வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது