தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் மற்றும் கட்சிப் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் அனுமதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Categories