Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகர் பகுதியில் உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத் துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை நகர் பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடமான 7 ரோடு சந்திப்பு, கவிதியாகராஜர் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காட்டெருமையை கடந்து சென்றனர். அதிலும் சிலர் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர். சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த பிறகு காட்டெருமை தோட்டத்திற்குள் புகுந்தது. அதன்பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. எனவே காட்டெருமை நகர்ப் பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |