Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி…. கையும், களவுமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மெயின் ரோட்டில் ராஜ் என்பவர் அடகு கடை வைத்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் 3 பவுன் நகையை ராஜின் கடையில் அடமானம் வைத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நகையை பரிசோதித்த ராஜ் அது போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வெங்கடேசன் நகையை அடகு வைப்பதற்காக ராஜின் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது ராஜ் வெங்கடேசனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ் கடை தவிர மேலும் 3 அடகு கடைகளில் தலா 3 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் வரை வெங்கடேசன் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |