Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நகைகளை அடகு வைத்த பணம்….. ஓடும் பேருந்தில் 5 1 /2 லட்சம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஓடும் பேருந்தில் மர்ம நபர் 5 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் வையம் பட்டியில் இருக்கும் ஒரு வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்து 5 1/2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். அதன்பிறகு சரண்யா ஒரு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தனது கைப்பை திறந்து கிடப்பதை பார்த்து சரண்யா அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து காணாமல் போன தனது பணம் குறித்து சரண்யா பேருந்தில் இருந்த மற்ற பயணிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் தெரியாது என கூறியுள்ளனர். இதனால் சரண்யா வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஓடும் பேருந்தில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |