Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனை…. பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நகை கடன் தள்ளுபடியில் அரசு கடும் நிபந்தனை விதித்ததை கண்டித்து, பயனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதியை குறிப்பிட்டிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்த கடனானது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்வதில் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி நகையை 5 சவரனுக்கு குறைவாக இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், 40 கிராமுக்கு (5 சவரன்) மேல் ஒரு கிராம் அதிகமாக நகை அடமானம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நகை கடன்கள் தள்ளுபடி கிடையாது என்று திமுக அரசு தற்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆகவே திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி, 50 சவரன் நகை கடன் தள்ளுபடி அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என பயனாளிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்கள் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாததை கண்ட பயனாளிகள் மிகுந்த ஏமாற்றத்துடன், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

அந்தவகையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த தென்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தென்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நகை அடகு வைத்து கடன் பெற்று இருந்த நிலையில்,  தற்போது தமிழக அரசு 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து பல கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த நகைகளை திரும்ப வழங்கி வரும், அதே சமயம்  வங்கியில் சிலருக்கு நகைகளை திரும்ப வழங்கப்பட்டதாகவும், இன்னும் பலருக்கு நகைகளை திரும்ப வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது.

மேலும் ஒருசிலருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை என்றும், இதில் ஒரு சிலருக்கு கணக்கெடுப்பில் விடுபட்டு விட்டதாகவும், ஒரு சிலரை ஓராண்டு வட்டியை கட்டி மீட்டு நகைகளை மீட்டு செல்லுமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கு பணம் வழங்கப்படாமல் அதை பாஸ்புக்கில் வரவு வைத்து இருப்பதாகவும்,ஆனால் வெளியே இருக்கின்ற ஏடிஎம் இயந்திரத்தில் பார்த்தபோது பணம் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து பெரும்பாலான பயனாளிகள் அதிர்ச்சி அடைந்து கூட்டுறவு சங்க அதிகாரிகாளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் முறையான பதில் எதையும் கூறாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயனாளிகள் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற வேண்டுமானால் ஓராண்டு வட்டியை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் புதிய நிபந்தனையை விதித்துள்ளது,  பயனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |