Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அதிர்ச்சி அளிக்கும் புதிய நிபந்தனை…. ஷாக் நியூஸ்….!!!!

நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யும் என அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகே தென்மலை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் பயனாளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பலருக்கு  நகைக்கடன் தள்ளுபடி  வழங்கப்படாமல் இருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு சிலர்களின் பெயர்கள் நகைக்கடன் தள்ளுபடி விடுபட்டுள்ளதாகவும், ஓராண்டு வட்டியை தள்ளுபடி செய்யப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் வங்கியில்  நகை அடமானம் வைத்ததற்ககான பணத்தை வழங்காமல் அதை சேமிப்பு கணக்கில் வரவு வைத்துள்ளதாக கூறியுள்ளனர். இதன்காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |