Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து?…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடியை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் இல்லாத பகுதியை சேர்ந்த பல விவசாயிகள் உள்ளனர். எனவே அவர்கள் பொதுத்துறை வங்கிகளில் தான் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு இந்த நகை கடன் தள்ளுபடி பொருந்தாது.

எனவே தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும், அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்று லிங்கராஜ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, பரேஷ் உபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றம் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |