Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி இவர்களுக்கு கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.  இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி செய்யப்பட்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |