தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வந்து கொண்டிருக்கிறது. கோவில் நிலங்களும் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல் வடிவம் பெற்றிருக்கிறது.
மேலும் நகை கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.