தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25% பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள். 2020இல் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாது” என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை நகை கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினீர்கள் தற்போது வாக்குறுதியை தள்ளுபடி செய்துள்ளீர்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்த திமுக அரசு தேர்தலில் வென்ற பிறகு நகை கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கடந்த ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தொகை தள்ளுபடி செய்யமுடியாது என்று கூறியுள்ளது . நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! இன்று தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, 72 சதவீத நகைக் கடன்கள் தள்ளுபடிக்குத் தகுதியற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது எப்படி ஏற்கத்தக்கது? என்று விமர்சனம் செய்துள்ளார்.