Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?…. ஓபிஎஸ் அதிரடி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு அடமான நகைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நகை கடையை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது.அதனைதொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கி நகை கடன் வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்வர்கள், ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்கதாவர்கள் மற்றும் வெள்ளை அட்டை வைத்திருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது. இதன்படி வங்கிகள் பெறப்பட்ட 48 லட்சம் நகை கடனில் 35 லட்சம் பேருக்கு நகை கடன தள்ளுபடி கிடையாது என்ற கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து  திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியது,” நகைக்கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி கடனை தள்ளுபடி செய்து அவர்களை கடன் சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Categories

Tech |