Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில்  தமிழகத்தில் தற்போது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி நாளான நாளை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள வேளாண்மை துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன. இதில் 110 விதியின் கீழ் நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |