Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு “ஷாக் நியூஸ்”…. வெளியான புதிய நிபந்தனைகள்….!!!!

தமிழகத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி நகைக்கடன் பெற தகுதியான மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியானது. இதில் மொத்தமுள்ள 48,84,726 பேரில் 35,38,693 வேர் தகுதியற்றவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அனைத்து மக்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 சவரனுக்கும் கீழ் இருக்கும் நகைகளை தனித்தனியாக அடகு  வைத்திருந்தால் அந்த நகை தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. இதனையடுத்து 5 சவரனுக்கு ஒரு கிராம் அதிகமாக இருந்தாலும் தள்ளுபடி கிடையாது. அரசு ஊழியர்களுக்கு தள்ளுபடி கிடையாது போன்ற பல்வேறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் நகைக்கடன் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |