Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: யாரிடம் முறையிடுவது?…. தேர்வாகாதவர்கள் முக்கிய கோரிக்கை….!!!!

நகைக்கடன் தள்ளுபடிக்கு‌ தேர்வாகாதவர்கள் கூட்டுறவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதன்படி 14.40 லட்சம் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிலையில் நகை கடன் தள்ளுபடிக்கு  தகுதியானவர்களாக இருப்பினும் சிலருக்கு தள்ளுபடி வழங்கப்படாமல் இருக்கிறது.

இவர்கள் வங்கிகளில் சென்று முறையிட்டால் வங்கி அதிகாரிகள் சரியான பதிலை தெரிவிப்பதில்லை. இதன்காரணமாக பயனாளிகள் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர். எனவே நகை கடன் தள்ளுபடி பயனாளர்கள் யாரிடம் சென்று முறையிட வேண்டும் என்ன  ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை கூட்டுறவுத்துறை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |