Categories
அரசியல்

நகைக்கடன் தள்ளுபடி ரத்து…? இது கொஞ்சம் கூட நியாயமில்ல…. மாஜி அமைச்சர் குற்றசாட்டு…!!!

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நியாய விலை கடை ஒன்று கட்டப்பட்டது. முன்னாள் மின்சார துறை அமைச்சரும், தற்பொழுதுள்ள சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்கள் இதனை திறந்து வைத்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் 500 வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் அதில் 200 வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் முதல்வர் எந்தெந்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என்பதை தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

மேலும் அவர் சொன்ன முக்கியமான வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. இதில் குறிப்பிடத்தக்கது, கூட்டுறவு சங்க வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகையின் தரத்தை மதிப்பிட்டாளர்கள் மட்டுமே பரிசோதனை சோதனை செய்ய இயலும், இந்நிலையில் வேறு சில இடங்களில் நடந்தவற்றை வைத்து அனைத்து இடங்களிலும் நகை கடன் தள்ளுபடி செய்வதை ரத்து செய்வது நியாயமற்றது ஆகும். தமிழகத்துக்கு நீட்தேர்வானது தேவையற்ற ஒன்று என்பது அதிமுகவின் கொள்கைகளில் ஒன்றாகும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை சந்திக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வருகின்றார்” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |