தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகள் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது.
அதாவது போலி நகைகளைக் கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. அதனால் தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது 48, 85,000 நபர்கள் நகை கடன் தள்ளுபடி விண்ணப்பித்தவர்களில் 13,30,000ஆயிரம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.