இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தற்போது பண்டிகைக காலகடன் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி கார், நகை, தனிநபர் மற்றும் வீட்டுக் கடன்களுக்கு குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு 75 சதவீதம் வரையில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இருசக்கர வாகனங்களுக்கு 100 சதவீதம் வரையிலும், வீட்டுக் கடனுக்கு 6.75 சதவீதமும் கடன் கிடைக்கிறது. தனிநபர் கடனாக 40 லட்சம் வரையிலும் தொழில் கடனாக 75 லட்சம் வரையிலும் கொடுக்கப்படுகிறது.