Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகைக்கடையின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை …!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருச்செங்கோடு பழைய சேலம் சாலையில் இயங்கி வரும் தனியார் நகை கடையின் பொருட்கள் சிதறி கிடப்பதாக அதன் உரிமையாளருக்கு முத்துசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியொடு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 45 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Categories

Tech |