Categories
தேசிய செய்திகள்

நகைக்கடை தொழிலதிபரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

நகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரி என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ராகுல். இந்த நிலையில் அவரது கடைக்கு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த தொழில் அதிபரை சுட்டுள்ளனர். அதை பார்த்த பெண்கள் அலறிய போது அவர்களிடம் துப்பாக்கியை காட்டி அந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் பட்ட பகலில் நகை கடையில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதில் பதிவாகி இருக்கும் அந்த அடையாளங்களை வைத்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |