மாணவியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உமர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியின் கழுத்தில் கிடந்த நகைக்காக கடத்தி சென்றதாகவும், அது போலி நகை என்று தெரிந்தவுடன் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் மாணவியை விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் உமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.