Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகைக்காக நடந்த கொடூரம்…. தனிப்படையினர் தீவிர விசாரணை…. குற்றவாளி அதிரடி கைது….!!

நகைக்காக பெண்ணை கொலை செய்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி 20 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து நயினார்கோவில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் கரிசல்குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான முனீஸ்வரனை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றவாளி சாலியவாகனபுரத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்று அவரை கைது செய்துள்ளனர். மேலும் முனீஸ்வரனிடம் நடத்திய விசாரணையில் அவர் ராணியை நகைக்காக கொலை செய்ததும், இதுபோல் பல்வேறு இடங்களில் திருடுவதும் உறுதியாகியுள்ளது.

Categories

Tech |