Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகைக்கு உரிய ஆவணம் இருக்கிறதா….? வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

அதிகாரி போல் நடித்து நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மூலப்பாளையம் பூந்துறை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து நீங்கள் நகைகளை அணிந்து செல்வதற்கு உரிய ஆவணம் வேண்டும் என்று கேட்டு அந்த நபர் மிரட்டியுள்ளார். அதன்பின் குழந்தை வேல் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து குழந்தைவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஈரோடு தாலுகா காவல் துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |