தமிழகத்தில் மதுரை, சிவகங்கை திருவண்ணாமலை, தர்மபுரி, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்ற நகைக்கடன் மோசடிகளை தமிழக அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டம் பாளையம், சேலம் காடையம்பட்டு கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபர் 2425 கிராம் நகைகளை ரூபாய் 72 .39 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஒரே குடும்பத்தினர் 614 நகைக்கடன் 1.63 கோடிக்கும், மற்றவர்கள் ரூபாய் 2.46 நகைக்கடன்களை ஒரே ஆதார் எண்ணை வைத்து நகைக்கடன் பெற்றிருக்கின்றனர்.
மதுரையில் AAY குடும்ப அட்டை மூலம் 70 லட்சம் ரூபாய் நகைக்கடனும், சிவகங்கையில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் குன்றகுடி கூட்டுறவு வங்கியின் மூலம் 65 லட்சம் ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கி 25க்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கூற்றுரைவு சங்கங்கள் தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் நோக்கில் நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பாடுகள் உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நிர்வாக குழுவினர் நீடித்திருப்பதும், ஒரே சங்கத்தில் ஒரே செயலாளர்கள் பணிபுரிவதும் குளறுபடி காரணமாக உள்ளதாக கூறியுள்ளது.