Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் வாங்கப் போறீங்களா….? எந்தெந்த வங்கியில் வட்டி குறைவு….. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் நகை கடன் வாங்குபவர்கள் குறைந்த வட்டியில் எந்த வங்கியில் நகை கடன் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் . தங்க நகை கடன் வங்கி அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் பெற முடியும் . நகைகளை அடமானம் வைத்து அதற்கேற்ப சந்தை மதிப்பை வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கடன் வாங்கும்போது சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  தங்க நகைகளை அடகு வைத்து அதற்கு பணத்தை கடனாகப் பெற்று பின்னர் அந்த தொகையை திருப்பி செலுத்தி நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

வங்கிகளைப் பொருத்தவரை தங்க நகை கடனுக்கு வட்டியும் பெரிதாக இருக்காது. தங்க நகைகளை வாங்கி வைத்து கடன் வாங்குவது என்பது இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறை.  மருத்துவம், பொருளாதார நெருக்கடி, விவசாயம், தொழில் தேவை என பலரும் அவரவர்கள் தேவைக்காக நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குகின்றனர். குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கும் சில முக்கியமான வங்கிகள் மூலம் நகைகளை அடகு வைத்து நகை கடன் பெறமுடியும்.

அந்த வங்கிகள்: “பெடரல் வங்கி – 8.50 %,எஸ்பிஐ (SBI) – 7.30%, பஞ்சாப் & சிந்து வங்கி – 7 %,பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) – 8.75 %, கனரா வங்கி – 7.35 %, இந்தியன் வங்கி – 7%,பாங்க் ஆஃப் பரோடா (BOB) – 9.00%, கர்நாடகா வங்கி – 8.49 %, ஐடிபிஐ வங்கி (IDBI) – 7%, HDFC வங்கி – 11%”  கடன் வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தங்க நகை கடன் வாங்க ஆதார், பான் கார்டு இருப்பது கட்டாயமாகும். கடன் வாங்குவதற்கு முன்பு தங்கம் 18 காரட்டுக்கு குறைவாக இருக்கக் கூடாது. ஏனெனில் பல வங்கிகள் 18 காரட்டுக்கும் குறைவான தங்க நகை கடனை வழங்குவதில்லை.

Categories

Tech |