நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு அண்மையில் இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் கம்ரா பல கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனக் கேள்வி எழுப்புகிறார். எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை.
மேலும் பாஜக ஆதரவாளருமான அர்ணாப் கோஸ்வாமியிடம், குணால் கம்ரா தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்திற்காக இண்டிகோ விமானம் குணால் கம்ராவுக்கு 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில் விமானத்தில் சகபயணியிடம் குணால் கம்ரா நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மேலும் இது மாதிரியான செயல்களில் மற்ற பயணிகள் ஈடுபடக்கூடாது மேலும் சக பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இண்டிகோ நிறுவன அதிகாரி விளக்கம் அளித்துள்ளது.