சென்னையில் நேற்று (பிப்..23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.120 குறைந்தது. ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 4,735க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 37,880க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று சில்லறை வர்க்கத்தில் 1 கிராம் வெள்ளி ரூபாய் 69க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று(பிப்..24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்து உள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 4,827க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து 1 சவரன் ஆபரணத் தங்கமானது இன்று ரூபாய் 38,616க்கு விற்பனையாகிறது. இதனிடையில் சில்லறை வர்க்கத்தில் 1 கிராம் வெள்ளி ரூ.70.60க்கு விற்பனையாகி வருகிறது.