நகை திருடிய பெண்ணை கையும் களவுமாக பிடித்த அந்த ஒப்பந்த பெண் பணியாளர்களை கமிஷனர் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் நிவேதா. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்து உள்ளார். இவர் இப்படி சுற்றித் திரிந்ததால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்கள் நிவேதாவை மடக்கிப் பிடித்து மருத்துவமனையில் உள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் நிவேதா என்ற அந்தப் பெண் பிரசவ வார்டில் உள்ள பெண் நோயாளியின் நகைகளை திருடியது தெரிய வந்ததை அடுத்து போலீசார் நிவேதாவை கைது செய்தார்கள். இதையடுத்து நகையை திருடிய பெண்ணை மடக்கிப் பிடித்த ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு போலீஸ் உதவி கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.