மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் கோ. ஜினு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்,பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் 23 ஆயிரத்து 553 கடன்காரர்களுக்கு ரூபாய் 93.05 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி நகை கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் 5 பவுனுக்கு உட்பட்டு நகை கடன் பெற்றுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு சென்று தங்களது தள்ளுபடி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.