Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகை சேர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

தனது திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர் படும் கஷ்டத்தை கண்டு இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பழைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். 51 வயதுடைய இவர் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரேவதி என்ற மகள் உள்ளார்.. மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.. சிறிது சிறிதாக நகைகளை சேர்த்து வைத்தால்தான் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று பெற்றோர்கள் வீட்டில் பேசி கொண்டிருப்பதை ரேவதி கேட்டுக்கொண்டுள்ளார். தமக்காக பெற்றோர் கஷ்டப்படுவதை பார்த்து ரேவதி வருத்தமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திருவேற்காட்டிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக ரேவதியிடம் கூறிவிட்டு பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேவதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே பெற்றோர் ரேவதிக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தவரைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் .

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் திருமணத்திற்காக தனது பெற்றோர் நகைகளை சேர்ப்பதற்காக படும் கஷ்டத்தை கண்ட ரேவதி மன உளைச்சலால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |