Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை… திருடிச் சென்ற மர்ம…. தடயங்கள் சேகரிக்கும் அதிகாரிகள்….!!

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 3/4 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 8 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணனின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணன் உடனடியாக கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 2 3/4 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடையங்கள் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |