சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்குரூ.400 குறைந்துரூ.38,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா,உக்ரைன் போர் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக பிப்ரவரி 22ஆம் தேதி 38,000 யும், பிப்ரவரி 24ஆம் தேதி 39,000யும், மார்ச் 7ஆம் தேதி 40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு விலை குறைந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 38,552 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் குறைந்து,ரூ. 4,819 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்குரூ. 1.40 குறைந்து ரூ.72.80 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவிற்கு ரூ.1400 குறைந்து ரூ.72,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய் கிழமை விலை ரூபாயில்
1 கிராம் தங்கம் ……….4,819
1சவரன் தங்கம் ……….38,552
1கிராம் வெள்ளி ……..72.80
1கிலோ வெள்ளி ……..72,800
திங்கள் கிழமை ரூபாயில்
1 கிராம் தங்கம் ……….4,869
1சவரன் தங்கம் ……….38,952
1கிராம் வெள்ளி ……..74.20
1கிலோ வெள்ளி ……..74.200