Categories
மாநில செய்திகள்

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. குறைந்தது ஆபரணத் தங்கம்…. இன்றைய விலை நிலவரம் இதோ…..!!!!!

சென்னையில் நேற்று (பிப்ரவரி 15) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூபாய் 38 ஆயிரத்தை நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 344 உயர்ந்து ரூபாய் 37, 904-க்கும், கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 4, 738-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 69, 200-க்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,500 க்கும் மேல் அதிகரித்து ரூபாய் 37,904 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 16) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 248 குறைந்து ரூபாய் 37,320க்கும், கிராமுக்கு ரூபாய் 31 குறைந்து ரூபாய் 4,665க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூபாய் 67.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |