Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகை வாங்குவதுபோல் நடித்து….. நைசாக திருடிய பெண்கள்….. கேரமாவில் பதிவான காட்சிகள்….!!

நகை வாங்குவதுபோல் நடித்து 2 பெண்கள் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் பெரிய கடை பஜாரில் தங்க நகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு பர்தா மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு 2 பெண்கள் நகை வாங்குவது போல் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த பழைய தங்க நகைகளை கொடுத்துவிட்டு 2 கிராம் தங்க மோதிரம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து 3 பவுன் தங்க செயின் வாங்குவதாக கூறி செயின் மாடல்களை காட்டும்படி கூறியுள்ளனர். இதனால் ராஜேந்திரனும் தங்க சங்கிலிகளை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அப்போது சங்கிலியை பார்த்துகொண்டிருந்த 2 பெண்கள் நைசாக ஒரு தங்க சங்கிலியை திருடி விட்டு அவர்கள் வைத்திருந்த கவரின் செயினை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் கடையில் உள்ள நகைகளை சரிபார்த்தபோது கவரிங் செயின் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாகசிசிடிவி கேமராவை பார்த்தபோது 2 பெண்கள் சங்கிலியை திருடியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |