சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பெண் ஒருவர் தானாக போலீசில் சரணடைந்துள்ளார்.
சத்தீஸ்கரில் சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டு களின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல், கடத்தல் போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் போலீசார் உடனான மோதலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு பொதுமக்கள் போலீஸர் மற்றும் அரசியல்வாதிகள் என பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை சத்தீஸ்கர் போலீஸர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நக்சலைட் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என போலீஸர் அறிவித்து வருகின்றனர். இதன்படி சத்தீஸ்கரில் பெண் நக்சலைட்டாக செயல்பட்ட புஜ்ஜி என்ற ஜானி பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சத்தீஸ்கர் போலீஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் அதனை தவிர்க்கும் விதமாக ஜனனி என்ற அந்தப் பெண் நக்சலைட் மாவட்டத்தில் அந்தகார் பகுதியில் உள்ள போலீசில் நேரில் சென்று நேற்று சரண் அடைந்திருக்கின்றார் நக்சலைட்டான இவரது கணவரும் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி போலீசில் சரணடைந்திருக்கின்றார். மேலும் போலீசில் சரண் அடைந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் போலீஸ் தரப்பில் இருந்து பரிசாக ஜனனிக்கு அழைக்கப்பட்டுள்ளது என சத்தீஸ்கர் போலீஸர் தெரிவித்துள்ளனர்.