நக்சலைட் அமைப்பின் முக்கியத் தளபதி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது மக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடிக்கடி இந்திய எல்லைப்பகுதிகளில் நக்சலைட் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கும். இதனால் ராணுவ வீரர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வகையில் தற்போது நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி ஹரிபூசல் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக சத்தீஸ்கர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் பல வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார். மேலும் இவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் அளிப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் தற்போது கொரோனா காரணமாக உயிரிழந்துவிட்டதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பல இடங்களில் இருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தினால் பலரும் உயிர் இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.