சதீஷ் கரிப்பூர் மாவட்டத்தில் நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை கேதுல்நார் கிராமத்தை சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகில் உள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷனே கூறியுள்ளார்.
அந்தப் பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்து சிதறி உள்ளது. காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. வனப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களை குறி வைத்து மண்ணில் வெடிகுண்டுகளை புதைத்து வைக்கின்றனர் நக்சல்கள்.